திரில்லிங் வெற்றி : ஆஷஸ் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து : ஹைலைட்ஸ் வீடியோ

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில்லிங் வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.


நேற்றுடன் முடிந்த இப்போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 238 ஓட்டங்களையும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 270 ஓட்டங்களையும் எடுத்தது. பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில், இயன் பெல்லின் அதிரடி சதத்தால் 330 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 299 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலிய அணி துரதிஷ்டவசமாக 224 ஓட்டங்கள் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 167 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்திருந்தது. ஆனால்  இங்கிலாந்தின் பிராட் மிகச்சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது. ஐந்தாவது போட்டி ஆகஸ்டு 21ம் திகதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

1950 ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி முதன்முறையாக ஆஷஸ் தொடரின் மூன்று போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியாவை படு தோல்வி அடையச் செய்திருக்கிறது. அத்துடன் ஆஸ்திரேலிய அணி தான் கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«