தேர்தலை நடத்தக் கோரிய மனு விசாரணை ஒத்தி வைப்பு


பிரதேச எல்லை மீள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரி இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

மனுவில் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் பிரதிவாதிகளுக்கு விசாரணை அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாததால், இது குறித்த விசாரணை அடுத்த மாதம் 7ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts:

«