தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதற்கு ஆயுள் தடை கோரிய வழக்கு விசாரணை வந்தது!

தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதற்கு ஆயுள் முழுவதும் தடை செய்யக்கோரி கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இன்றைய விசாரணையில் இந்த வழக்கில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். அதே போன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள்தான்  என்பதால், மத்திய அரசுதான் முதலில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர்.  

எனவே, இவ்வழக்கு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிவித்து, தமது தரப்பு விளக்கத்தையும் அப்போது மத்திய அரசு எடுத்து வைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related Posts:

«