நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார்??

நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். மும்பை பத்திரிக்கையொன்றில் அவர் ஆபாசமாக போஸ் கொடுத்த படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மேலாடையின்றி அரை நிர்வாண கோலத்தில் இருப்பது போன்றும் படங்கள் வந்தன. திடீரென கவர்ச்சி போஸ் கொடுக்க காரணம் என்ன என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சினிமா போட்டி நிறைந்த தொழிலாக மாறி விட்டது. இதில் நீடிக்க வேண்டுமானால் இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது தவறு இல்லை என்று எனக்கு தோன்றியது. எனக்குள் அழகான கவர்ச்சி இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதற்காகவே இந்த போட்டோ ஷூட்டிங்கில் பங்கேற்றேன்.

இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது எனக்கொன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் போட்டோ ஷூட்டிங்கிற்கு பிறகு எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. இந்தியில் கூட வாய்ப்புகளை பெற்று தந்தது. இந்த இரண்டாவது போட்டோ ஷூட்டிங் எனக்கு மேலும் படவாய்ப்புகளை பெற்று கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

திருமணம் எப்போது என்று பலரும் கேட்கின்றனர். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. இது பெரிய வயது என நான் எண்ணவில்லை. ஹாலிவுட்டிற்கு போய் பாருங்கள். அங்கு கதாநாயகிகள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில்தான்.

தற்போது இந்தி திரையுலகில் 30 வயதை தாண்டியவர்கள் நிறைய பேர் கதாநாயகிகளாக உள்ளனர். அவர்கள் எல்லோரையும் விட நான் சிறியவள்தான். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன்.

Related Posts:

  • No Related Posts

«