நமாலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் கட்சி உறுப்புரிமை இல்லாமல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பிரேரணைகள் எதிர்வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளாதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியையும், கட்சித் தலைவரையும் நாமல் ராஜபக்ஸ தொடர்ந்தும் விமர்சனம் செய்து வருகின்றார்.

அத்துடன், அவருக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ஸ கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளாதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

«