நம்பிக்கைகள் அனைத்தும் தோற்றுப்பானதாக உணர்கிறீர்களா? : இவ்வீடியோ உங்களுக்கானது!

எப்போதாவது, உங்களது அனைத்து நம்பிக்கைகளும் தோற்றுப்போனதாக உணர்கிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது!


நம்ம ஊரு சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சிகளை போன்று ஆஸ்திரேலியாவில் 2011இல் நடந்த X Factor இல் உலகை கலக்கியவர் எமானுவேல் கெலி (Emmanuel Kelly). இறுதி 6 போட்டியாளர்கள் வரை இவர் முன்னேறியிருந்த போதும், முதன் முறையாக இவர் ஆடிஷனுக்காக பாடிய பாடலே அனைவரையும் சிலிரிக்க வைத்துவிட்டது. 14 மில்லியன் யூடியூப் ஹிட்ஸுடன்  இன்னமும் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது இவ்டியோ. இன்று வரை ஏதோ ஒரு பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு இமானுவேலின் வீடியோவை போட்டுக்காட்டுகிறார்கள்.

முடிந்தால் அடுத்தமுறை நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் போது இந்த வீடியோவையும் காட்சிப்படுத்துங்கள்.

இந்த வீடியோவை பார்த்துவிட்டு எமானுவேல் கெலி பற்றி தேட நினைப்பவர்களுக்கு சில மேலதிக தகவல் :

யுத்த களமுனையில் இராசயன ஆயுதங்களின் தாக்கத்தால் பிறக்கும் போதே இரு கைகளின்றி பிறந்த அனாதைக்குழந்தைகளான எமானுவேலையும் அவரது சகோதரரையும் ஒரு சப்பாத்துப்பெட்டியிலிருந்து தூக்கி எடுத்து வளர்த்திருக்கிறார் அனாதை குழந்தைகளுக்கான நிறுவனத்தை சேர்ந்த மொயிரா கெலி.  இதனால் தான் எமானுவேல் கெலி தனக்கு எத்தனை வயது என்பது சரியாக தெரியவில்லை என கூறியிருக்கிறார்.


ஆஸ்திரேலிய பாடல் போட்டியின் பின்னர், இவரது பாடும் திறன் உலகம் முழுவதும் புகழை சேர்க்க தற்போது, கனடாவின் Born a Star எனும் நிகழ்சியின் சார்பில் உலகின் 18 நாடுகளுக்கு இசை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை எமானுவேல் பெற்றுக்கொண்டார்.

ஆனால் இவரது உடலின் மூட்டுக்கள் வலிமையற்றதாக இருப்பதால் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். இல்லையேல் பிற்காலத்தில் சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்வை தொடர வேண்டி வரலாம்.


மிகப்பெரிய இசைக்கலைஞராக வேண்டும் என்ற தனது கனவின் காரனமாக, கடந்த இரு வருடங்களில் இரு முறை அறுவை சிகிச்சையை தவிர்த்துவிட்டு வெளிநாட்டு இசை வாய்ப்புக்களை தேடி சென்றுவிட்டார். இம்முறையும் சிறிது காலத்திற்கு அறுவை சிகிச்சைகளை தள்ளிவைத்துவிட்டு, அமெரிக்க, கனடா இசை சுற்றுப்பயணத்தில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். காரணம் தனது இலட்சியத்தை அடைய எந்த கஷ்டத்தையும் ஏற்க தயார் என்கிறார் கெலி.  

Related Posts:

«