நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமானதே: பிரணாப் முகர்ஜி

பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியம்தானா என்றும், அப்படி சாத்தியமானால் அது வரவேற்கத் தக்கது என்றும் கூறியிருந்தார். காரணம், வீணான செலவுகள் குறையும் என்றும் கூறியிருந்தார். இதைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில், நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார் பிரணாப் முகர்ஜி. அப்போது பேசிய அவர் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒப்பானதே என்றும், இதைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார். பிரதமரின் இந்த ஆலோசனை வீணான பொருட் செலவை, கால விரயத்தை கட்டுப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

Related Posts:

«