நான்கே வினாடிகளில் சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் தரை மட்டமானது!

மொத்தம் 182 சக்திவாய்ந்த  RDX. பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதால் இன்றே இடிக்க வேண்டும், இவை நாளை வரை பாதுகாப்பாக இருப்பது என்பது சாத்தியமல்ல, இரவில் இடி மின்னல் ஏற்பட்டால் நிலமை கைமீறி போகும் என்று முழு மூச்சாக தனியார் நிறுவன தொழில் நுட்ப பணியாளர்கள் இன்றே இந்த சாதனையை செய்து முடித்தனர்.  

தமிழகத்தில் இன்று முதல் பெரிய கட்டட தகர்ப்பு புதிய தொழில் நுட்பத்தில் நடத்தப்பட்டது. முன்னதாக கட்டிடத்துக்கு 100 மீட்டர் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர்.நாய், மாடுகள் என்று அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.விமானங்கள் கூட கட்டிடத்தின் மேலே பறக்க அனுமதிக்கப்படவில்லை.

Related Posts:

«