நியூசிலாந்து ஒரு நாள் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு… ரெய்னாவுக்கு வாய்ப்பு !

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ந்தேதி தொடங்குகிறது.

அதனைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந்தேதி டெல்லியிலும், 3-வது போட்டி சண்டிகரில் 23-ந்தேதியும் நடக்கிறது. இந்த மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

எம்.எஸ்.டோணி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விராட் கோஹ்லி துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 India vs New Zealand, Indian squad for ODI series announced

அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

எம்.எஸ்.டோணி (கேப்டன்), விராட் கோஹ்லி (துணை கேப்டன்), மனிஷ் பாண்டே, ரோகித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, ஹ்ரிதிக் பாண்டியா, அக்ஷர்

படேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்மித் பும்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங் மற்றும் கேதார் ஜாதவ். உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காயத்தால் அவதிப்படும் தவான், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டுள்ளனர். 

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/5eHJVTEBMOE/india-vs-new-zealand-indian-squad-odi-series-announced-264498.html

Related Posts:

«