நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த ஆலோசனை

நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த இன்று தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த வருடம் சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம், வருவாய் இழப்புக் காரணமாக உடனடியாக இழுத்து மூடப்பட்டது.இந்த நிறுவனத்தில் வேலைப்பார்த்த தொழிலார்கள் இந்நிறுவனத்தை மத்திய அல்லது மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.தமிழக அரசு இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்ததால், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி பங்கஜ் தலைமையிலான குழு இன்று சென்னை வந்தது.

சென்னை வந்து தமிழக அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.ஆலோசனையில் மத்திய அரசு நோக்கியா செல்போன் நிறுவனத்தை எடுத்து நடத்துவதுக் குறித்தும், இதனால் எத்தகைய கூடுதல் பணிகள் மற்றும் நிதிகளை சுமக்க வேண்டி இருக்கும் என்பதுக் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிய வருகிறது. ஆலோசனை முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

Related Posts:

«