பங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டன

பிரஹ்மன்பரிஹா மாவட்டத்திலுள்ள நஸிர்னாகர் நகரில் உள்ள ஆலயங்களே ஞாயிற்றுக்கிழமை சூறையாடப் பட்டுள்ளதுடன் அங்கிருக்கும் 100 இந்துக்களின் வீடுகளும் அகற்றப்  பட்டுள்ளன. மதப்பூரிலுள்ள இரு ஆலயங்கள் தாக்கப் பட்டதை அடுத்து 6 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தை அடுத்து BGB எனப்படும் பங்களாதேஷின் எல்லைப் படையினர் நஸிர்னாகரில் குவிக்கப் பட்டுள்ளதுடன் ஆயுதம் தாங்கிய போலிசாரும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை தாக்குதலானது 2012 ஆம் ஆண்டு கொக்ஸ் பஷாரில் உள்ள பௌத்த சமூகத்தினர் மீது தொடுக்கப் பட்ட தாக்குதலுக்கு இணையாக இருந்தது எனப்படுகின்றது.

Related Posts:

«