பரதேசி : எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ட்ரெய்லர்Paradesi Trailer

இயக்குனர் பாலாவின் பரதேசி பட ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.


இயக்குனர் பாலுமகேந்திரா தலைமையில் நடிகர்கள், விக்ரம், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா : நான் செண்ட்டிமெண்ட் பார்க்காதவன் என்பவன் என்பது உங்களுக்குத்தெரியும். அதனால் படத்தின் தலைப்பு சென்ட்டிமென்ட்டாக வைக்கப்பட்டது என்று முடிவெடுக்காதீர்கள்.

அதர்வாவிற்கு நான் செய்யும் கடமையாகத்தான் இந்தப்படத்தில் அவனை நடிக்க வைத்தேன். ஜி.வி.பிரகாஷூம் அதிகம் பேசாதவன்; நானும் அதிகம் பேசாதவன். அதனால் எப்படி அவனிடம் மியூசிக் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். படம் முழுவதையும் எடுத்து முடித்து அவனுக்கு போட்டுக்காண்பித்தேன். இதற்கேற்றார் போல் மியூசிக் வேண்டும் என்று கேட்டேன். அது மாதிரியே போட்டுக்கொடுத்துவிட்டான்.

வைரமுத்து சாருக்கு படத்தைப் போட்டுக்காண்பித்து இதற்கேற்றார் போல் பாடல்கள் வேண்டும் என்று கேட்டேன். அவர் மூன்று நாட்கள் கழித்து என்னை அழைத்தார். பாடல்வரிகள் அடங்கிய காகிதங்களை என்னிடம் கொடுத்துவிட்டு, ‘இது ரத்தத்தால் எழுதப்பட்ட வரிகள். ஒரு வரி கூட மாறக்கூடாது’என்று கூறினார்.

மதுரைப்பக்கம் கொஞ்சம் நகைச்சுவையாகத்தானே பேசுவார்கள் என்று நானும் சிரித்துக்கொண்டே வாங்கினேன். பேனா மை தீர்ந்துவிட்டதால் ரத்தத்தால் எழுதியிருப்பாரோ என்று கூட நகைத்துக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்து பாடல் வரிகளை படித்துப்பார்த்தபோது அவர் சொன்னது உண்மை என புரிந்தது. அத்தனை பாடல்களும் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. இந்தப்பாடல்களை கேட்கும்போது உங்களுக்குத்தெரியும் என்றார்.

பாலா இயக்கத்தில் அதர்வா, தன்ஷிகா மற்றும் வேதிகா ஆகியோரின் நடிப்பில், வெளிவரவிருக்கிறது பரதேசி. இத்திரைப்படத்திற்கான வசனத்தை நாஞ்சில் நாடன் எழுதியுள்ளார். இத்திரைப்படம் எரியும் தணல் எனும் மலையாள நாவலை அடிப்படையாக கொண்டு 1930 களில் நடந்த உண்மை சம்பவத்தை மையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று பரதேசியின் ட்ரெய்லரும் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டது. நீங்கள் பார்க்க தவறியிருப்பின் உங்களுக்காக :

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SV4oEP4QUY8

Related Posts:

«