பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

நேற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை சட்டப்பேரவைக் கூட உள்ளது. 


நேற்று ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், பிற்பகலில் உடனடியாக மற்ற துறைகளின் அமைச்சர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இவர்கள் நாளைக் காலை 7.30 மணிக்கு அமைச்சரகாகப் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தற்காலிக சபாநாயகர் செம்மலை தலைமையில் நாளை சட்டப்பேரவைக் கூட உள்ளது. 

சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் ஜூன் மாதம் 1ம் திகதி புதிய சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், நாளைய சட்டப்பேரவை நிகழ்வுகள் மிக மிக சுவாரஷ்யமாக இருக்கும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Related Posts:

«