பருப்பு விளைச்சல் இந்த வருடம் 21 மில்லியன் டன்னாக உயர்ந்தது: வேளாண் அமைச்சர்

உத்திர பிரதேசம் மதுராவில் வேளாண் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசிய ராதா மோகன் சிங், இந்த வருடம் 30 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பருப்பு பயிரிடப்பட்டது என்று அறிக்கையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார். எனவே, பருப்பு விளைச்சல் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவுக்கு 21 பில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். இதே போன்று காய்கறிகள், பழங்கள் விளைச்சலும் கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெவித்த அவர், பால் உற்பத்தி பன்மடங்காக இந்த வருடம் அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

விளைச்சல் பன்மடங்காக உயர காரணம் என்று பார்க்கும்போது சரியான நேரத்தில் பெய்த மழைதான்  என்றும் ராதா மோகன் சிங் தெரிவித்தார். என்றாலும், இந்த ஆண்டு பருப்பு வகைகள் பற்றாக்குறை ஏற்படுமா, அதை சமாளிக்க என்ன செய்ய உள்ளோம் என்பதுக் குறித்து அவர் ஒன்றும் தெரிவிக்கவில்லை என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

 

Related Posts:

«