பழம்பெரும் நடிகையும் செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடல் புகழ் நாயகி மைனாவதி காலமானார்

‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ என்கிற பிரபலாமன பாடல், சங்கீதம் படிக்கும் குழந்தைகளும் விரும்பி கையில் எடுத்து பாடும் பாடல் என்றால் அது மிகை அல்ல.

அந்த பாடலுக்கு வெகு அற்புதமாக நடனமாடி இருப்பவர் பழம்பெரும் நடிகை மைனாவதி. இவர் உடல்நலக் குறைவு காரணமாக காலையில் காலமானார்.

     மைனாவதி கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே என்கிற ரஜினி படப் பாடலில் ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை பண்டரிபாயின் இளைய சகோதரி. மைனாவதி நடிகர் திலகம் நடிகவேள் எம் ஆர் ராதா இவர்களுக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.
    
பழம் பெரும் நடிகைகளில் பலரும் பரதநாட்டியம், குச்சுப்பிடி என்று கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள் அப்படி நடனத் திறமையுடன் நடிக்க வந்தவர்களில் நடிகை மைனாவதியும் ஒருவர். அவர் மறைந்தாலும் அவர் நடித்த செந்தமிழ் தேன்மொழியாள் பாடல் காட்சி இனி வரும் இளைய சமுதாயத்தையும் தன்னகத்தே ஈர்க்கும் என்பதில் துளியும் சந்தேகம்  இல்லை என்றே பல தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *