பழைய அரசைப் போல புதிய அரசும் சர்வதேசத்தை ஏமாற்றப் பார்க்கிறதா?

ஐரோப்பிய கண்கானிப்பாளர்களை திசை திருப்பும் முயற்சி கேப்பாபுலவு கிராமத்தில் அரசினால் திட்டமிட்ட முறையில் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் கேப்பாபுலவு தற்காலிக மாதிரிக் கிராமத்தை நிரந்தரக் கிராமம் போன்று காட்ட இரவோடு இரவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லை மாவட்டத்தில் மக்கள் மீள் குடியமர்வின் போது கேப்பாபுலவு கிராமம் முழுமையான இராணுவம் ஆக்கிரமித்து அப் பிரதேச மக்களை காட்டில் இறக்கிவிடப்பட்பட்டு மாதிரிக் கிராம்ம் என்ற பெயரில் குடியமர்த்தப்பட்ட போதும் தமது நிலம் எவ்வாறும் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் காத்திருந்தனர்.

இந்தவேளையில் அண்மையில் இடம்பெற்ற ஐ.நா வின் தீர்மானத்திற்கு அமைய சொந்த நிலத்திற்குரிய மக்களை அவர்களின் பூர்வீக சொந்த நிலங்களிலேயே மீளக்குடியமர்த்த வேண்டும் எனவும் ஓர் பரிந்துரை உள்ளது.

இவ்வாறான அம்சங்களை கண்கானிக்கும் குழு நேற்று முன்தினம் கொழும்பு வந்துள்ள நிலையில் அடுத்த வாரம் வட பகுதியின் 5 மாவட்டங்களிற்கும் நேரில் வருகை தந்து மீள் குடியேற்றம், காணமல் போனோர் உள்ளிட்ட விடயங்களை ஆராயவுள்ளனர்.

இதன் ஆபத்தை உணர்ந்த அரசு இராணுவத்தினர் மூலம் கேப்பாபுலவு மாதிரிக் கிராமம் என்ற பெயரினை நேற்றைய தினம் அவசர அவசரமாக நீக்கி கேப்பாபுலவு என மட்டும் பெயர் இட்டு அப்பிரதேசமே அவர்களின் பூர்வீக நிலம் என்ற ஓர் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இப் பிரதேச மக்கள் கடும் விசனமடைந்துள்ளதோடு இதனை இப் பிரதேச அரசியல்வாதிகள் உடனடியாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts:

«