பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் உத்தரவு!

உளவு வேலையில் ஈடுபட்ட பாகிஸ்தான் தூதரக அலுவலர் நேற்று கையும், களவுமாக சிக்கினார். அவர் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு 48 மணி நேர கெடு விதித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசும் பதிலுக்கு  உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதற்கிடையில், எல்லையில் இந்திய-பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை 2 வது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வருவது, இந்திய எல்லையில் வசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Posts:

«