பாகிஸ்தானுடனான இறுதிப்போட்டியில் இந்தியா திரில்லிங் வெற்றி

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. தோனி 36 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் சயீத் அஜ்மல் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.5 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. அதிக பட்சமாக மிஸ்பா உல் ஹக் 39 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின், புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் இந்திய அணி மிக மோசமான துடுப்பாட்டத்தை கொடுத்திருந்த போதும், அபாரமான பந்துவீச்சும், மிகச்சிறந்த களத்தடுப்பும் இந்தியாவுக்கு வெற்றியை கொண்டுவந்திருக்கிறது.

பாகிஸ்தான் பேட்டிங் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னர், இந்திய வீரர்கள் மைதானத்தில் ஒன்று கூடி களத்தடுப்பையும், பந்துவீச்சையும்,  சிறப்பாக செய்ய சபதமெடுத்ததாகவும், இன்றைய வெற்றி இந்திய அணியின் குழு வெற்றி, ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிகச்சிறப்பானதாக இருந்ததாகவும் தோனி தெரிவித்தார்.

இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போதும் தொடரை 2-1 என பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இன்றைய போட்டி நாயகனாக தோனியும், தொடர் நாயகனாக பாகிஸ்தானின் நசீர் ஜாம்ஷித்தும் தெரிவாகினர்.

இதையடுத்து இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் முதலாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் ஜனவரி 11ம் திகதி நடக்கிறது.

Related Posts:

«