பாகிஸ்தானை துரத்தியடித்து ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

India beat Pakistan to clinch Asian champions trophy hockey

இந்தியாவுக்காக பர்தீப் மோர், ருபிந்தர் பால் சிங், ரமந்தீப் சிங் ஆகியோர் கோலடித்தனர். அதிலும் ருபிந்தர் பால் சிங் போட்ட கோல்தான் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. பாகிஸ்தான் தரப்பில் முகம்மது ரிஸ்வான் சீனியர், முகம்மது இர்பான் ஜூனிர் ஆகியோர் கோலடித்தனர்.

மலேசியாவின் குவான்டான் நகரில் இப்போட்டி நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து விறுவிருப்பாக இருந்த இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இிந்திய ரசிகர்களை துள்ள வைத்துள்ளது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/gdiFkMyclkE/india-beat-pakistan-clinch-asian-champions-trophy-hockey-265540.html

Related Posts:

«