பாப்பரசரினால் விடுவிக்கப்பட்ட சுதந்திர புறாவை தாக்கிய சீகுள் புறா! (வீடியோ)

வத்திக்கானில் உலக சமாதனத்துக்காக இடம்பெறும் சில வைபவங்களில் அகில உலக கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் கூண்டுகளில் வளர்க்கப்படும் வெள்ளைப்புறாக்களை தனது கைகளினால் விடுவித்து அவற்றிற்கு சுதந்திரம் வழங்குவது வழக்கம்.


இப்படித்தான் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இது போன்ற ஒரு வைபவத்தில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்து பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


அதாவது அன்று இடம்பெற்ற உலக சமாதானத்தை ஒட்டி நிகழ்ந்த பிரார்த்தனையை அடுத்து போப் பெனெடிக்ட் XVI உரையாற்றினார். இதன் போது  சமாதானத்தின் அறிகுறியாக வத்திக்கானில் உள்ள பால்கனி ஒன்றிலிருந்து வெள்ளைப் புறாக்களை அவர் தனது கையால் விடுவித்தார். இதன்போது அவற்றில் ஒன்று பறக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. பின்னர் மற்றையதை பறக்க விட்டதும் அது ஜன்னல் முனையிலேயே அமர்ந்து கொண்டது. அப்போது அங்கு யாரும் எதிர்பாராத நேரத்தில் சீகுள் என அழைக்கப்படும் ஒரு கடற்புறா திடீரென வந்து அந்த சமாதானப் புறாவைத் தாக்கத்தொடங்கியது.  இதனால் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாத்திரிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.


எனினும் சற்று நேரம் தடுமாறிய சமாதானப் புறா கடும் போராட்டத்துக்குப் பின்னர் அந்த கடற்பறவையிடம் இருந்து தப்பித்துச் சென்றதால் அவர்கள் ஆசுவாசம் அடைந்தனர். இதேவேளை இக்கடற்புறா சமாதானப் புறாவைத் தாக்கிய நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=TbXIrVbLVao

Related Posts:

«