பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானுக்கு இன்று 51 வது பிறந்தநாள்!


பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் இன்று தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான், 1965-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியில் பிறந்தார்.


இவர் தில் டரியா, மற்றும் ஃபௌஜி என்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். ஷாருக்கான் முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை” வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா” என்ற படம் 1992 ல் முதலில் வெளியானது. இவர் 1999ல் ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை, ஜூஹி சாவ்லா, இயக்குநர் ஆசிஸ் மிர்சாவுடன் இணைந்து தொடங்கினார்.


2007-ம் ஆண்டு கோன் பனேகா க்ரோர்பதி என்ற நேரடி விளையாட்டு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியையும், 2008 ல், க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹை à®Žà®©à¯à®± நிகழ்ச்சியையும், 2011 ல் ஜோர் கா ஜட்கா டோடல் வைப்அவுட் என்ற அமெரிக்கன் விளையாட்டு நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார்.


சிறந்த இந்திய குடியுரிமை விருது (1997), ராஜீவ் காந்தி விருது (2002), பத்மஸ்ரீ விருது (2005) மற்றும் 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/Bxjkq7CVBxw/article.php

Related Posts:

«