பிணைமுறி மோசடிகள் விசாரணை முடியும் வரை பதவி நீடிப்பை கோரப் போவதில்லை: அர்ஜுன மகேந்திரன்

பிணைமுறி மோசடிகள் தொடர்பிலான கோப் குழு விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் பதவி நீடிப்பை தான் கோரப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார். 


நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில், கலந்துகொண்டபோதே மத்திய வங்கி ஆளுநர் இதனை அறிவித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமையுடம் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

Related Posts:

«