பிணைமுறி மோசடியால் அரசாங்கம் ஆண்டுக்கு 5200 மில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது: பஷில் ராஜபக்ஷ

பிணைமுறி மோசடியினால் தற்போது நாட்டினுள் வட்டிவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே பஷில் ராஜக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 6.2% சதவீதமாக இருந்த வட்டி வீதம், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்தில் 12.35% வீதமாக அதிகரித்துள்ளது. வங்கிக்கடன், வீட்டுக்கடன் மற்றும் அடகு வைத்தல் போன்றவற்றிற்கு 6% வீதமாக இருந்த வட்டி வீதத்தை, தற்போதைய அரசாங்கம் 12% வீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த பிணைமுறி மோசடி காரணமாக ஆண்டொன்றுக்கு 5200 மில்லியன் ரூபா இலாபத்தை அரசாங்கம் இழந்துள்ளது. அதேபோல், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 1600 மில்லியன் ரூபாவாக இருந்த வெளிநாட்டு முதலீடு, இன்றைக்கு 900 மில்லியனாக குறைந்திருக்கின்றது. இதுவே, புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை வெளிப்படையாக காட்டுகின்றது.” என்றுள்ளார்.

 

Related Posts:

«