பிரதமர் தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நாளை நடை பெற உள்ளது.


நாளை ஞாயிற்றுக் கிழமை மக்களவைத் தேர்தலுக்கான திகதிகளை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டமும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அமைச்சரவைக் கடைசிக் கூட்டம் நாளை நடை பெற உள்ள நிலையில், கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டம் ஆலோசிக்க உள்ளதகத் தெரிய வருகிறது. தேர்தல் அறிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும், ஊழல் தடுப்பு மசோதா உள்ளிட்ட 4 முக்கிய மசோதாக்கள் அவசர சட்டமாகக் கொண்டு வருவது குறித்தும் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று தகவல் தெரிய வருகிறது.

Related Posts:

«