பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.


 

திட்டக்குழுக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் தொடங்கப்பட்ட நிலையில், இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் அதன் தலைவர் அர்விந்த் பங்காரியா மற்றும் முக்கிய பொருளாதார நிபுணர்கள், உறுப்பினர்களாக உள்ள அருண்ஜெட்லி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளதாகத் தெரிய வருகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

இதையடுத்து இதன் உறுப்பினர்களாக உள்ள மாநில முதல்வர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் வருகிற 8ம் திகதி டெல்லியில் நடைபெற உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது

Related Posts:

«