பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்புகின்றார்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்ப உள்ளார்.

ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தனர்.

பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று இரவு இலங்கை வந்தடைவார்கள் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சீன விஜயத்தின் போது கைத்தொழிற்சாலைகள் கொள்கலன் களஞ்சியசாலைகள் தொழில்நுட்ப பூங்காக்கள் நிதி நிறுவனங்கள் புத்தாக்க உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு இலங்கையில் இவற்றை எவ்வாறு பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கவனம் செலுத்தியுள்ளனர்.

அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாபா சம்பிக்க ரணவக்க பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சிரேஸ்ட ஆலோசகர் சரித ரத்வத்த பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி உள்ளிட்ட சிலர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிந்தனர்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«