பிரபாகரனின் மரணத்தை பொய்யாக்கிய மஹிந்த..!


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், அவரின் உயிரிழப்பை உறுதி செய்யும் வகையிலான எந்த ஒரு ஆவணத்தையும் இலங்கை அரசாங்கம் இது வரையிலும் முன்வைக்க வில்லை.

இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழ் மற்றும் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை என்பவற்றை சமர்பிக்குமாறு இன்றளவிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

பிரபாகரனின் உயிரிழப்பை உறுதி செய்யாத நிலையில், ஆண்டுகள் ஏழு கடந்துள்ள போதிலும் இன்றும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் கருத்து பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது என்றே கூறவேண்டும்.

இந்நிலையில், பிரபாகரனின் உயிரிழப்பு என்பது பொய்யான ஒரு ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த மஹிந்த ராஜபக்ச “பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் தாம் இருக்கவில்லை” என கூறியிருந்தார்.

இந்த கருத்து “பிரபாகரன் உயிரிழந்ததாக” கூறப்படும் கருத்தை மறுக்கும் வகையில் அமைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்தையடுத்து நாடு திரும்பிய மஹிந்த ராஜபக்ச விமானத்திலிருந்து இறங்கிய நிலையில், மண்ணை முத்தமிட்டு யுத்த வெற்றியை வெளிப்படுத்தியமை யாவரும் அறிந்த ஒன்றே.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் பிரபாகரனின் மரணத்தை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இது வரையிலும் மரணசான்றிதழ் வழங்கமை, டி.என்.ஏ அறிக்கை வழங்கமை மற்றும் வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நிலைகொண்டுள்ள இராணுவம் என்பன பிரபாகரனின் மரணத்தை மறைமுகமாக பொய்யாக்கி வந்தது.

இந்நிலையில், இன்று மஹிந்த ராஜபக்ச வெளியிட்டிருக்கும் கருத்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பிரபாகரனின் சடலம் குறித்து அந்த காலப்பகுதியில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் வெளிவந்திருந்தமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

குறிப்பாக, அந்த சடலம் பிரபாகரனின் முக ஒன்றுமையுடைய இராணுவ வீரர் ஒருவரின் சடலம் எனவும், பிரபாகரனின் உடலமைப்பை கொண்ட ஒருவரை மார்பிங் செய்து காட்டப்பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், போலியான ஒருவரின் சடலத்தை மஹிந்த ராஜபக்சவுக்கு பார்க்கும் மனோநிலை அப்போது இருந்திருக்கவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அண்மையில் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்தும் அமைந்துள்ளது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

எது எவ்வாறாயினும், அரசாங்கம் கூறுவதனை போன்று பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதனை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றே..

Related Posts:

«