பிரபாகரன் தமிழ் அடையாளத்தை வைத்தே போராடினார் – திருமாவளவன்

பாரதீய ஜனதா கட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இலங்கையில் சிவசேனை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியில், இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தியே போராட்டங்களை நடாத்தினாரே தவிர, இந்து மதத்தை முன்வைத்து போராட்டங்களை அவர் நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடல்நிலை குறித்து யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts:

«