பிரித்தானிய தமிழர் பேரவையின் உள்ளுர் கட் டமைப்புகளுக்கான தேர்தல் 2016!

எம் தொடர்ச்சியான செயல்பாடுகள் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசின் கொடூரமான அத்தியாயங்களை வெளிக் கொண்டு வந்தது.

2009ஆம் ஆண்டு உச்சகட்ட இன அழிப்பின் பின், இராணுவ மேலாதிக்கத்தின் மூலமும் சர்வதேச நாடுகளின் பாராமுகமும் தமிழ் மக்களிடையே வளரும் தோல்வி மனப்பான்மையும் தமிழர் தாயகத்திற்கான உரிமைப்

போராட்டத்தினை நிரந்தரமாக அழித்து விட்டது என கனவு கண்ட ராஜபக்ச அரசிற்கு பலமான பதிலடியைக் கொடுத்தது பிரித்தானிய தமிழர் பேரவை.

புதிய வியூகங்கள் மற்றும் மூலோபாயங்கள் வகுக்கப்பட்டு உலகளாவிய அளவில் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை எடுத்துச் சென்று தமிழ் மக்களுக்கான நீதி கோரும் போராட்டத்தினை பிரித்தானிய தமிழர் பேரவை விஸ்தரித்தது.

எம் மக்கள் மத்தியில் உரிமைப் போராட்டத்திற்கான நம்பிக்கை மீண்டும் வளரத் தொடங்கியது. மக்களின் பங்களிப்பினூடாக இன்று தமிழர் போராட்டத்தின் நியாயத்தினை ஏனைய இனத்தவர் புரிந்து கொள்ளவும் தம் நாடுகளில் அதனை வலியுறுத்தவும் இது வழிகோலியது.

இதனை எதிர் வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவோம். பிரித்தானிய தமிழர் பேரவையினை பலப்படுத்துவோம்.

2009ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவத்துக்கூடாக ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவைச் செயல்பாட்டளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியமான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் உச்சமட்ட மன்றமான நாடு தழுவிய ‘தேசிய அவைக்கு (National Assembly)’ 2016ஆம் ஆண்டுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியம் எங்கும் உள்ள 21 உள்ளுர் தமிழர் பேரவைகளுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் ஆரம்பித்துள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுர் தமிழர் பேரவைகள் ஒவ்வொன்றும் ‘தேசிய அவைக்கு’ தமது பிரதிநிதிகளை அனுப்புவார்கள்.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் என்ற விழுமியங்களை ஆரம்பத்தில் இருந்தே முன்வைத்து மிகப்பெரிய புலம்பெயர் தமிழர் அமைப்பாக செயல்படுகின்ற பிரித்தானிய தமிழர் பேரவை வருடாந்தம் நடைபெறும் தமிழர் பேரவைகளுக்கான தேர்வுகள் நடைபெறும் விபர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளன.

SW London region:- 1) Tooting, 2) Mitcham, 3) Croydon, 4) Kingston

Date:- Sunday 7th August 2016

Time: 5.00PM – 7:30 PM

Venue: 130 Tolworth Broadway, Surbiton KT6 7HT

Contact us on 020 8808 0465 or 07508 365678 or 07939325486 or 07940472459

or 07446172273

================================

SE London region – 1) Lewisham 2) Bromley 3) Dartford

Date:- Sunday 7th August 2016

Time: 7:00 PM – 9:30 PM

Venue: Lewisham Sivan temple, 4A Clarendon Rise, London SE13 5ES

Contact us on 020 8808 0465 or 07508 365678 or 07974726095 or 07825 448753

==========================

NW London region:- 1) Brent 2) Ealing 3) Harrow 4) Hayes

Date:- Sunday 7th August 2016

Time: 5:30 PM – 8:30 PM

Venue: 10 Courtenay House, Courtenay Rd, East Lane, Business

Park, Wembley HA97ND

Contact us on 020 8808 0465 or 07508 365678 or 07814486087

=======================

NE London region:- 1) Essex, 2) Eastham, 3) Walthamstow, 4) Edmonton

Date:- Sunday 7th August 2016

Time: 5.00PM – 7:30 PM

Venue: Conference Room, TCHA. Tamil house, Unit 1, Fountain Business

Centre, Broad Lane, Tottenham hale, London N15 4AG.

Contact us on 020 8808 0465 or 07508 365678

Related Posts:

«