பிறந்து ஆறு நாட்களேயான சிசுவின் கைவிரல் தாதியினால் துண்டிப்பு

பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாட்களேயான சிசுவொன்றின் கை விரல் வைத்தியசாலை தாதி ஒருவரினால் துண்டிக்கப்பட்டதான சம்பவமொன்று தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களம் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் ஆகியவற்றினால் இருவேறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.

சத்திர சிகிச்சை மூலம் குறித்த சிசுவின் கைவிரல் பொறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அது வெற்றியளிக்கவில்லை. அதனால், இன்னும் சில தினங்களில் மீண்டும் கைவிரலைப் பொறுத்தும் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த சிசுவுக்கு ஊசி மருந்தேற்றும் போது தற்செயலாக விரல் துண்டிக்கப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts:

  • No Related Posts

«