புதியவர்களின் பேஸ்புக் இன்பாக்ஸுக்கு செய்தி அனுப்ப $ 1 டாலர் அறவிட ஃபேஸ்புக் பரிசீலனை

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத புதியவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்புவதற்கு குறித்த பாவனையாளரிடம் $ 1 டாலர்


அறவிடும் புதிய நடைமுறை ஒன்றை ஃபேஸ்புக் நிறுவனம் பரிசீலனை செய்து பார்த்துள்ளது. இவ்வாறு கட்டணம் அறவிடுவதற்கான நோக்கம் குறித்த புதுமுக நண்பரின் அக்கவுன்ட் இன்பாக்ஸ் இற்குள் நேரடியாக இந்த செய்தி போய்ச் சேர்வதற்காகும். இதன் மூலம் வேறு கோப்புக்களுக்குச் சென்று ஏனைய தேவையில்லாத செய்திகளுடன் இச்செய்தி மறைந்து போகாமல் பாதுகாக்கப் படுகின்றது.

மேலும் கூகிளின் இப்பரிசீலனை அமெரிக்காவில் மட்டும் குறைந்தளவு பாவனையாளர்கள் மத்தியிலேயே மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன்படி ஃபேஸ்புக் பாவனையாளர்கள் புதுமுகத்திடம் இருந்து கட்டணம் அறவிடப்படும் ஒரு செய்தியையே அதிகபட்சமாக பெற முடியும் என்பதுடன் ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு தடவை அதிகபட்சம் 3 செய்திகளே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஃபேஸ்புக்கின் இந்த வசதி குறித்து பல பாவனையார்கள் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் தேவையற்ற செய்திகள் மற்றும் ஸ்பேம் என்பவை பரவி பாவனையாளர்களின் உரிமை பாதிக்கப் படுவதும் தடுக்கப் படுகின்றது என்கிறார்கள். குறித்த புதிய வசதி மூலம், நீங்கள் வேலை தேடும் ஒரு நிறுவனத்தின் எம்.டியை கூட நண்பராக்கி கொள்ள முடியும். அதாவது உங்களது Request ஐ நேரடியாக அவரது இன்பாக்ஸுக்கு அனுப்பமுடியும்.

 மேலும் இது குறித்து ஃபேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சூக்கெர்பேர்க் கருத்துரைக்கையில், பொது மக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் பல மின்னஞ்சல் சேவைகளுக்குப் பதிலாகவும் ஃபேஸ்புக் செய்திச் சேவையை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அடுத்த ஜூனுக்குள் அனைத்து ஃபேஸ்புக் பாவனையாளர்களுக்கும் @facebook.com எனும் அனைத்து ஈ-மெயில்களுக்கும் இந்த சேவை சென்றடையும் வண்ணம் அதில் மாற்றம் கொண்டு வரப் படும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«