புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு: உம்மன் சாண்டி

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக் கட்டுவது ஒன்றேத் தீர்வு என்று, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். 


முல்லைப் பெரியாறு அணை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளபடி 142 அடி கொள்ளளவை எட்டி வருகிறது. அணையிலிருந்து நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், 999 ஆண்டுகளுக்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளித்துள்ள உம்மன் சாண்டி, அணை அதுவரை பாதுகாப்பாக இருக்கும் என்று யாராலேனும் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

எப்படியும் இன்றில்லாவிட்டாலும் நாளை என்கிற அளவில் புதிய அணைக் கட்டியாக வேண்டும், அதை ஏன் இப்போதே கட்டக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் தமிழகத்துக்கு எந்த விதத்திலும் தண்ணீர் தர கேரள அரசு மறுக்காது என்றும், புதிய அணைக் கட்டுவது ஒன்றே கேரள அரசின் நிலைப்பாடு என்றும் உம்மன் சாண்டி கூறியுள்ளதோடு, இதுக் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts:

«