புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக முதல்வரின் நலன் விசாரிக்க சென்னை வந்தார்!

நேற்று புதுச்சேரியிலிருந்து அப்பலோ வந்த கிரண்பேடி .12:43 மணிக்கு அப்போலோ மருத்துவ மனை உள்ளே சென்றார்.உள்ளே சென்ற அவர் 1:05 மணிக்கு வெளியே வந்தார். செய்தியாளரிம் பேசினார். அப்போது, முதல்வர் சிகிச்சை குறித்து அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தேன். பிரதாப் ரெட்டியிடம் முதல்வர் பேசியதாக கூறினார். மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பை முதல்வர் நல்கிவருவதாகவும் தெரிவித்த அவர் முதல்வர் சிகிச்சை பெற்று வருவதால் அவரை சந்தித்து பேச முடியவில்லை. தன்னோடு பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உடன் வந்ததாகவும் கூறினார்.

அண்டை  மாநிலம்  என்பதால் பல்வேறு விஷயங்களுக்காக சந்திக்க திட்டமிட்டிருந்தேன் ஆனால் சந்திக்க முடியவில்லை. அவர் விரைவில் குணமடைந்து பணிகளை மேற்கொள்ள எனது வாழ்த்துக்கள்.என்று கூறினார்.

 

Related Posts:

«