புதுமுக இயக்குநர்களுக்கு எஸ்.வி.சேகர் அறிவுரை..!


எஸ்.வி.சேகர் கதை, திரைக்கதை எழுதி, ‘யாருடா மகேஷ்’ திரைப்படத்தை இயக்கிய மதன்குமார் வசனம் எழுதி, இயக்கியிருக்கும் படம் மணல்கயிறு-2. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.வி.சேகர், “சமீபகாலமாக நான் அதிகமான விவாகரத்து செய்திகளை கேள்விப்பட்டதால், இந்த சமயத்தில் மணல்கயிறு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த படம் உருவானது. நான் நடித்த மணல்கயிறு படத்தில், à®•à®Ÿà¯à®Ÿà®¿à®•à¯à®•à®ªà¯à®ªà¯‹à®± பொண்ணு எப்படி இருக்கணும்னு எட்டு கன்டிஷன் போடுவேன். அதே மாதிரி இந்த படத்தில் ஹீரோயின் எட்டு கன்டிஷன் போடுவாங்க. நான் ஹீரோயினுக்கு அப்பாவா நடிச்சிருக்கேன். எப்படி விசு இல்லாமல் அந்த மணல்கயிறு இல்லையோ அதே மாதிரி விசு இல்லாமல் இந்த மணல்கயிறும் இருக்ககூடாதுனு, அவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அவருக்காக வெயிட் பண்ணி, உடம்பு சரியானதும் இந்த படத்தில் நடிக்க வைத்தோம். 
நான் சென்சார் போர்ட்டில் உறுப்பினராக இருப்பதால், இந்த படத்தை பக்கா யூ சான்றிதழ் படமாக எடுத்திருக்கேன். இப்போ இருக்கிற புதுமுக இயக்குநர்கள், படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டு சென்சாருக்கு வராங்க. அப்படி வந்தா, சென்சார் போர்ட் என்ன சொல்லுதோ அதை கேட்டுத்தான் ஆக வேண்டும். ஏன்னா படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிட்டு இருக்கும். சில காட்சிகளை கட் பண்ணனும்னு சொன்னாக்கூட பண்ணி தான் ஆகணும். ஆனால் ரிலீஸ் தேதி முடிவு பண்ணாமல் சென்சாருக்கு போனால், அவங்ககிட்ட வாக்குவாதம் பண்ண நேரம் இருக்கும். சில காட்சிகளை மாற்றியமைக்கக்கூட டைம் இருக்கும். அதனால் இப்போ இருக்கிற புதுமுக இயக்குநர்கள் à®‡à®¤à¯ˆ கடைப்பிடித்தால் அவங்களுக்கு உபயோகமாக இருக்கும்” என்று அறிவுரையோடு முடித்தார் எஸ்.வி.சேகர்.

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/UtUNxWwKQJY/article.php

Related Posts:

«