புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அரசாங்கம் பேசியதில் தவறில்லை: மஹிந்த சமரசிங்க

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அரச செலவில் வசதிகள் வழங்கப்பட்டதாகவும், இரகசியமாக பேச்சு நடைபெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. சிறந்த வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர செயற்பட்டு வருகிறார். அவர் புலம்பெயர் அமைப்புக்களைச் சந்தித்து பேச்சு நடத்தியதில் தவறு எதுவும் இல்லை. அவர்கள் பிரிவினைவாத கோரிக்கையுடையவர்களாக இருந்தால் அவர்களை எமது பக்கம் திருப்ப வேண்டும். அதற்கு பேச்சு நடத்துவது பொருத்தமானதே.” என்றுள்ளார்.

 

Related Posts:

«