புலியை நேருக்கு நேர் சந்தித்து போட்டோ எடுத்த பிரதமர் மோடி !

ராய்ப்பூர்: ராய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி எடுப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு விழா “ராஜ்யோத்சவம்’ என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அம்மாநிலத்தில் உள்ள நந்தன் வனவிலங்குகள் பூங்காவைப் பார்வையிட்டார்.

PM Modi clicks photos of tigers

பூங்காவில் இருந்த விலங்குகளைப் பார்வையிட்ட அவர், வேலி அருகே நிற்கும் புலியைத் தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பிரதமர் கேமராவில் படம் பிடிப்பது போன்ற படத்தை டுவிட்டரில் மோடி வெளியிட்டார். இந்த படம் வேகமாக பரவி வருகிறது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/AAyIl8LH3P8/pm-modi-clicks-photos-tigers-266167.html

Related Posts:

«