பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

மிகக் குறைந்தளவிலான பெண்களே நாட்டில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆறு வீதமாகும்.

மாகாணசபைகளில் ஐந்து வீதமாகும். உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டு வீதமாகும். வேறு நாடுகளில் அதிகளவான பெண்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர்.

பெருந்தோட்டப் பகுதிகளில் பெண்கள் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதனால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற இரண்டு பெண்கள் அண்மையில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *