பெண் கொடுத்த புகாரின் பேரில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஐந்து குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னைப் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இவிகேஎஸ். இளங்கோவன் மீது ஐந்து குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இவிகேஎஸ். இளங்கோவன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும்முதல்வர் ஜெயலலிதா சந்திப்பைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக தமிழகம் முழுக்க அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தினமும் இவிகேஎஸ். இளங்கோவன் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டும் வருகிறது.இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்,இவிகேஎஸ்.இளங்கோவன் மீதுப் புகார் அளித்துள்ளார்.

அவர் இவிகேஎஸ்.இளங்கோவன் அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர் என்று தெரிய வருகிறது.புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு, காயம் ஏற்படுத்துவது, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு அடிப்பது என்று 5 குற்றப்பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவிகேஎஸ்.இளங்கோவன் கைதாகும் வாய்ப்புக்களும் உள்ளதால், அவர் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.அதோடு, வருகிற திங்கட்கிழமை இந்த மனு விசாரணைக்கு வரும் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் இவிகேஎஸ்.இளங்கோவன் இன்று அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.

Related Posts:

«