பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் அடிப்படை உரிமை மீறல் வழக்கு


சந்தேகநபர் ஒருவரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுத்தமை தொடர்பில் பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரைச் சந்திக்க அவரது வழக்கறிஞர் சென்றிருந்த வேளையில் பொலிசார் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சட்டத்தரணியான தினேஷ் அஞ்சன இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சந்திப்பதற்கு தனக்கு அனுமதி மறுக்கப்பட்டமையானது தனது மற்றும் சந்தேக நபரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று தீர்ப்பளிக்குமாறும், இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Related Posts:

«