பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பாதீனியம் ஒழிப்பு தொடர்பிலான செயற்பாடுகள், சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமை தொடர்பிலான விடயம், மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் செயற்திட்டம், கார்த்திகை மரநடுகைத் திட்டம், உழவர் திருநாள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே விவசாய அமைச்சர் மீது பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆயினும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை பொன்னுத்துரை ஐங்கரநேசன் சபையில் நிராகரித்துள்ளார்.

Related Posts:

«