போடா போடி : விமர்சனம்Poda Podi Review

ரஜினியின் நாற்காலி போலவே இன்னொரு நாற்காலியை எந்த பர்னிச்சர் கடையின் சுவரை பேர்த்தாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற வெகு வருட வேட்கையோடு நடமாடும் சிம்பு,

இப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் பாணியை பின்பற்றாமலும், வில்லன்களில் மூக்கு நுனியில் பஞ்ச் வசனங்களை பந்தி வைக்காமலும் நடித்திருக்கும் படம். அந்த ஒரு விஷயத்துக்காகவே சிம்புவை வாழ்த்தலாம். வரவேற்கலாம். (அப்படியும் ஒரு பாடல் காட்சியில் அவரைப் போலவே நடந்து காட்டுகிறார் சிம்பு) ஒரு ஜாடைக்கு இப்படம் ‘விண்ணை தாண்டி வருவாயா’ போலிருப்பதற்கு காரணம், ஒளிப்பதிவாளராக இருக்கலாம். அல்லது நமது கண்களின் இடமாறு தோற்றப் பிழையாகவும் இருக்கலாம்.

லண்டனில் தங்கியிருக்கும் சிம்பு ஒரு நாள் ராத்திரி கலர் பல்புகள் மின்ன, ‘லவ் பண்லாமா? வேணாமா?’ என்று ஆவேசமாக ஒரு பாடலை பாடுகிறார். அந்த பாடலின் இறுதி நிமிடம் ‘பண்லாம்’ என்கிற முடிவுக்கு தள்ளுகிறது அவரை. அடுத்த காட்சியில் ஒரு குடி மடத்தில் சந்திக்கிறார் வருவை. அதாவது புதுமுகம் வரலட்சுமியை. சிம்புவின் கள்ள டாலரை நிஜம் என்று நம்பி அவரை பிரமிக்கும் வரு, அப்புறம் ஏண்டா லவ் பண்ணினோம் என்று நொறு நொறுவாகிப் போக, சண்டை-லவ்… சண்டை-லவ் என்று நகர்கிறது படம். முன் பாதிக்கு பின் பாதி தேவலாம் என்கிற இறுதி முடிவோடு தியேட்டரை விட்டு வெளியேறும் ஜனங்கள், அந்த வரலட்சுமிக்கு குடும்பம் அப்பன் ஆத்தாவெல்லாம் இல்லீயா இருக்காங்களா? இல்லீயா இருக்காங்களா என்று விவாதித்துக் கொண்டே நகர்வதுதான் கொடுமை.

சரி… சுமார் மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தின் கதைதான் என்ன? இப்படி காதலிக்க ஆரம்பிக்கும் சிம்புவுக்கு வரலட்சுமியின் சல்சா டான்சும் அதில் அவர் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வெறியோடு திரிவதும் சுத்தமாக பிடிக்காமல் போகிறது. கண்டவன் கூடவெல்லாம் கைய தொட்டு, அங்க தொட்டு, இங்க தொட்டு ஆடணுமா? நாம உண்டு. அழகான குழந்தை உண்டுன்னு வாழலாமே என்கிறார். அதுக்கெல்லாம் சான்சே இல்ல. என் ஒரே லட்சியம் டான்ஸ் காம்படிஷன்ல விண் பண்ணணும். அது மட்டும்தான் என்கிறார் வரு. இதற்கிடையில் விபத்தொன்றில் குழந்தையும் இறந்து போகிறது. அதற்கப்புறம் பிரிகிறார்கள்.

ஒரு கட்டத்தில் சிம்பு சொன்னதும் சரியான விஷயம்தான் என்று வருவுக்கு தோன்ற, நீயும் நானுமே சேர்ந்து ஆடலாம் என்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் சிம்பு சல்சாவுக்கு பதிலாக, அப்பா டி.ஆர் கற்றுக் கொடுத்த குத்துப்பாடலை ஆட, அயல்நாடே அல்லாடிப் போகிறது. ஆமாம்… சல்சா போட்டியில் சம்பந்தமே இல்லாமல் உள்ளே நுழைந்த குத்துப்பாட்டுக்கு பரிசு கொடுக்கிறார்கள். சிம்பு-வரு லட்சியம் நிறைவேற படமும் முடிகிறது.

நம்ம ஊர் டி.வியில வர்ற மானாட மயிலாடவை அப்படியே எடுத்துருக்காங்கப்பா என்கிற ஆடியன்ஸ் கமெண்ட் சிம்புவின் அடிவயிற்றை எரிய செய்யும் என்பதால் இதோடு நிற்க.

சிம்புவின் சேட்டைகளை ஆங்காங்கே ரசிக்கலாம். அதிலும் வரலட்சுமிக்கு ரூட் விடும் அந்த குறுந்தாடி டான்சரை அவருக்கே தெரியாமல் முகத்தை மூடி நொறுக்கி தள்ளுவது அப்ளாஸ் ஏரியா. இன்னும் பத்து புள்ள பெத்துக்கணும். அதுக்கு நான் மட்டும் இருந்தா எப்படி முடியும்? நீயும் வேணும். வா.. வந்து சேரு என்று அழுகையை அடக்க முடியாமல் முழங்கிவிட்டு போகிறாரே… அங்கே கூட!

வரலட்சுமி…! தமிழ்சினிமாவின் விசேஷ அழகி. நடிப்பும் அநாயசமாக வருகிறது. முதல் படத்திலேயே இவ்வளவு கிளமராக நடித்திருக்க வேண்டுமா என்கிற சின்ன நெருடலை தவிர வேறொன்றுமில்லை இவரிடம். (இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கும்மா…)

இவ்விருவரை தவிர படத்தில் யாருக்குமே அதிக முக்கியத்துவம் இல்லை என்பதாலும், ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனத்தை கவர்கிறார் என்பதாலும் வி.டி.வி கணேஷை பற்றியும் சில வரிகள் சிலாகிக்கலாம். இவர் சிம்புவின் பேவரைட் என்பதைவிட வசன உச்சரிப்புகளிலேயே சிரிக்க வைக்கிற மனுஷனல்லவா?

டி.ஆரோட என் ஆசை மைதிலிக்கு முன்னாடி எடுபடுமா இதெல்லாம் என்கிற சிம்புவின் டயலாக்கும் சத்யமான வார்த்தைகள்.

சிம்புவின் படங்களில் புதுமுக இயக்குனருக்கு என்ன வேலை இருக்கும் என்பது சினிமா புரிந்தவர்களுக்கு நன்கு புரியும். இருந்தாலும் புதுமுக இயக்குனர் விக்னேஷ் சிவாவுக்கு ஒரு வெல்கம்.

சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் லவ் இருந்தது. நடுவில் ஒரு டான்ஸ் மாஸ்டர் நுழைந்தார் என்பதையெல்லாம் அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே பார்த்தால் இப்படம் சுவாரஸ்யமான பயோகிராபியும் கூட!

அபிஷேக்

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *