மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாளில் பெருமளவானோர் கண்டுகளிப்பு

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது.

இறுதி தினமான இன்று கண்காட்சியினை கண்டுகளிப்பதற்காக பெருமளவான பொது மக்கள் வந்து செல்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி நடைபெற்றுவருகின்றது.

இன்றைய கண்காட்சிக்கு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வருகைதந்து பார்வையிட்டார்.

இதன்போது மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அகிலன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தகண்காட்சியில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை உட்படபல்வேறு துறைகளைச்சேர்ந்த 120க்கும் மேற்பட்ட உள்நாட்டு, சர்வதேச தொழில் சார்நிறுவனங்கள் தமது உயர் தொழில்நுட்பங்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியமட்டத்தில் இருக்கும் பல்வேறு துறைசார்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது துறைசார்ந்த சிறந்த தொழில்நுட்ப அறிவினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த கண்காட்சியில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Related Posts:

«