மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் சிறுவர் துஸ்பிரயோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் தொடர்பான துஸ்பிரயோகங்கள் அதிகரித்துக்காணப்படுவதாக திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள் இன்று காந்திபூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்னம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிகள் இணைந்து இந்த சிறுவர் தின நிகழ்வினை சர்வதேச சிறுவர் மாதத்தினை முன்னிட்டு நடாத்தியது.

இதன்போது சிறுவர்களுக்கு எதிரான வன்முறையினை தடுத்து அவர்களை பாதுகாப்பாக வாழவைப்போம் என்னும் தொனிப்பொருளில் ஊர்வலமும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சிறுவர்களின் வண்ணக்கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், விநோத உடைப்போட்டி உட்பட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்துடன் சிறுவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டதுட்டன், ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் பெருமளவான சிறுவர்களும் சிறுவர்களின் பெற்றோரும் வங்கி ஊழியர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«