மதச்சார்பற்ற நாடாக புதிய அரசியல் யாப்பில் பதியப்படவேண்டும் – ஞா.சிறிநேசன் எம்.பி

புதிய அரசியல்யாப்பில் இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்று பதியப்படும்போதே இலங்கை முன்னோக்கிய பயனிக்கும் நிலையேற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வும் தேசிய உற்பத்தி திறன்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் உள்ள மிகப்பெரும் குறைபாடு பௌத்த மதம் அரசமதம். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளுது. ஏனைய மதங்களுக்கு அதன் உரிமையை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

தற்போது புதிய அரசியல் யாப்பு வரையப்படுகின்றது. அந்த யாப்பிலாவது இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதத்தினையும் சமமாக மதிக்கின்ற நாடு என்கின்ற விடயம் பதிவுசெய்யப்படும்போதே இந்த நாடு முன்னோக்கி செல்லக்கூடிய நிலைமையேற்படும்.

இந்த நாட்டில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாகவே இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியது. இந்த அரசியல் யாப்பிலானது அனைத்து மதங்களுக்கும் சமத்துவமான உரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவில் 83வீதமான இந்துக்கள் இருந்தும் கூட அந்த நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாகவே இருந்துவருகின்றது. அதேபோன்று இலங்கையிலும் மதச்சமத்துவ தன்மை ஏற்படுத்தப்படுமானால் இந்த நாடு வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மாறாக ஒரு மதத்தினை மட்டும் நாங்கள் முதன்மைப்படுத்துவது என்பது ஏனைய மதங்களை இரண்டாம் தர நிலைக்கு தள்ளும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. முற்போக்கான அரசியல் திட்டமாக இருந்தால் மதச்சார்பற்ற தன்மை புதிய அரசியல்யாப்பில் இடம்பெறவேண்டும்.

பல்வேறு தரப்பினர் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி தங்களது மதங்களை பரப்புவதற்கு மற்றவர்களை தங்களது மதங்களுக்கு மாற்றிக்கொள்வதற்குமான வழிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts:

«