மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை: இ.வி.கே.எஸ்

மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 


இன்று முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் 98 வது பிறந்த நாள் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன், மழையால் தமிழகமே நீரில் மூழிகித் தத்தளிக்க மத்திய அரசு ஒரு இரங்கல் செய்திக் கூட தெரிவிக்கவில்லை என்றார். மத்திய அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.மேலும், எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்கள், மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார் என்று அவர் கூறினார்.

 

Related Posts:

«