மத்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு

ரோம்: மத்திய இத்தாலியின் நார்க்கியா அருகே பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் இதுவரை காயங்கள், உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை

Powerful tremor near Itali Norcia destroys buildings

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரோம் நகரில் இருந்து வடகிழக்காக 132 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் வீடுகள் குலுங்கின, இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

சமீபத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியின் அருகேவே காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவித்து உள்ளன.
நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கிஉள்ளன, இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. இதற்கிடையே இத்தாலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவுக்கொண்டது என்று ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டு உள்ளது.

இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 298 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/nfpCcJ6cH8c/powerful-tremor-near-itali-norcia-destroys-buildings-265997.html

Related Posts:

«