மத்திய பாஜக அரசால் நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன: கெஜ்ரிவால் அதிரடி!

டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், :மத்திய அரசால் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது நீதிபதிகள் புகார். இது பெரும் கவலை தரக் கூடியது.  

இப்படி ஒட்டுக்கேட்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான அத்துமீறிய தாக்குதல். நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் 9 மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இப்படி காலம் தாழ்த்துவது சரியானது அல்ல…இதனால் அரசு மற்றும் நீதித்துறை இடையேயான இடைவெளி அதிகரித்துவிடும்.இவ்வாறு பிரதமர் மோடி முன்னிலையிலேயே கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Related Posts:

  • No Related Posts

«