மனநிலை பாதிக்கப் பட்ட கொலைக் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது பாகிஸ்தானின் உயர் நீதிமன்றம்

2001 ஆம் ஆண்உ ஒரு மதகுருவை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப் பட்ட இம்டா அலிக்கு 2012 ஆம் ஆண்டே அரச மருத்துவர்கள் இவருக்கு மிக மோசமான மனநிலை பாதிப்பு இருப்பதாக சான்றிதழ் அளித்திருந்தனர். எதிர்வரும் புதன்கிழமை தூக்கிலிடப் படவிருந்த இவரது தண்டனையை ரத்து செய்யுமாறு பல சர்வதேச மனித உரிமை  அமைப்புக்களும் குரல் கொடுத்திருந்தன.  இந்நிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் மரண தண்டனை ரத்து தீர்ப்பை மனித உரிமைகள் மற்றும் தொண்டூழிய அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

நவம்பர் இரண்டாவது வாரம் குறித்த நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பில் மறுபடி கூடவுள்ளது.  2014 ஆம் ஆண்டளவில் பாகிஸ்தான் இராணுவப் பள்ளி  ஒன்றில் தலிபான் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 150 இற்கும் அதிகமான சிறுவர்கள் பரிதாபமாகப் பலியாகி இருந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானில் மீள அமுலுக்கு கொண்டு வரப் பட்ட தூக்குத் தண்டனை சட்டம் மூலம்  இதுவரை பெரும்பாலான தீவிரவாதிகள் உட்பட 425 பேர் வரை தூக்கிலிடப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • No Related Posts

«