மற்ற விளையாட்டுகள் போல் கபடிக்கும் ஊக்கம் தேவை.. இந்திய அணியின் பயிற்சியாளர் கோரிக்கை- வீடியோ

மதுரை: மற்ற விளையாட்டுகள் போல் கபடிக்கும் ஊக்கம் தேவை என இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஸ்கரன், ‘கபடி வீரர்களை ஊக்குவிக்க மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் சலுகைகள், வேலை வாய்ப்பு போன்றவற்றை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் பொருளாதாரத்தில் கீழ் தங்கிய மக்களே இந்த விளையாட்டில் அதிகம் கலந்து கொள்வதாகவும், உரிய உதவிகள் கிடைக்காததால் அவர்கள் எதிர்காலத்தில் அதிக பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ள இயலுவதில்லை’ என்றும் அவர் கூறினார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/4Du9VJYxMq8/kabadi-should-be-encourage-baskaran-265619.html

Related Posts:

«