மலேசியாவின் ஜூனியர் பாடவரலாம் : ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளம் பாடகர்கள்

தமிழகத்தில் வளர்ந்து வரும் இளம் பாடகர்களைப் போன்று மலேசிய மண்ணிலும் இளம் பாடகர்கள் தங்களின் கலைத் திறனை வெளிப்படுத்த வலுவான களம் அமைக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அணித் தலைவர் டி.மோகன் வலியுறுத்தியுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலேசிய இந்திய கலைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய அருங்காட்சி மண்டபத்தில் நடைபெற்ற ‘ஜூனியர் பாடவரலாம்’ எனும் சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கலை ஆர்வத்தை ஊட்டி வளர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மலேசிய இந்திய கலைஞர் அமைப்பு  தொடங்கிய ஒன்றரை வருடங்களில் ஒவ்வொரு மாதமும் கலை ஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருவது பாராட்டத்தக்கது எனவும் டி.மோகன் தெரிவித்தார்.

14 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டியாக  2 சுற்றுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் சுற்றில் புதிய பாடலையும் இரண்டாம் சுற்றில் பழைய பாடலையும் போட்டியாளர்கள் பாடி அசத்தினர்.

இப்போட்டிகளில் தீபன் மகேந்திரனும்-தயாஷினி ஆறு முகமும் வெற்றி வாகை சூடி முதல் பரிசைத் தட்டிச்சென்றனர்.  இவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் சிறந்த பாடகர் பாடகி எனும் அந்தஸ்தும் வழங்கப் பட்டது.

ரிஹரன் ஷழ்ண்முகமும் அங்கையற்கண்ணி அறிவழக னும் இரண்டாம் நிலை பரிசான ரொக் கம் 1,500 வெள்ளியை தட்டிச் சென்றனர். சுகேந்திரன் முத்துவும் காயத்திரி தாமோதரன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். இந்நிகழ்வில் நாட்டின் பிரபல இசை கலைஞர்களும் பொது மக்களும் திரளாக கலந்து ஆதரவு நல்கினர்.   

இந்நிகழ்விற்கு பெருமளவில் நிதியுதவி வழங்கிய பிரபல அறிவிப் பாளரும் குளோபல் மீடியா நிறுவனத் தின் நிர்வாகியுமான கீதாஞ்சலிஜி பேசுகையில், முன்னணி பாடகர்க ளுக்கு நிகராக சிறுவர்கள் எவ்வித நடுக்கமுமின்றி பாடும் விதம் பிரமிக்க வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்தப் போட்டியில் பங்கேற் பாளர்கள் எதிர்நோக்கும் இன்னல் களை சவால் வடிவில் எடுத்து கொள் ளும் பக்குவமே அவர்களின் எதிர்கால வெற்றியை உணர்த்துகின்றது என்றார்.

– 4தமிழ்மீடியாவுக்காக இளவரசி

Related Posts:

«